தொடர் பாலியல் சீண்டல்... பிளான் போட்ட மாணவிகள்... சிக்கிய ஆசிரியர்

தொடர் பாலியல் சீண்டல்... பிளான் போட்ட மாணவிகள்... சிக்கிய ஆசிரியர்

சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பிலும், நேரடி வகுப்பிலும் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி (45) என்பவர் முகப்பேரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், 11, 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வந்தார். கரோனாவால் ஊரடங்கு இருந்த நிலையில், ஆன்லைன் மூலம் மாணவிகளுக்கு பாடம் நடித்தியுள்ளார். இதனால், அனைத்து மாணவிகளின் செல்போன் நம்பர்களும் இவரிடம் இருந்தது. ஆன்லைனில் பாடம் நடத்தும்போது, மாணவிகளுடன் பேசுவதுடன், வாட்ஸ்அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்ததோடு, யாரிடமும் சொல்லவில்லை.

இதனிடையே, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அப்போதும் ஆசிரியர் ஸ்ரீதரின் பாலியல் சீண்டல் அதிகரித்துள்ளது. ஆசிரியரின் செயலை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், 11, 12-ம் தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவும் வெளி வந்த நிலையில், மவுனமாக இருந்த மாணவிகள் 2 பேர் ஆசிரியர் ஸ்ரீதர் மீது குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் புகார் கூறினர்.

இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவரை போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, ஆசிரியர் ஸ்ரீதரை நேற்று கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in