மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆசிரியரைப் பிடிக்கத் தனிப்படை தீவிரம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆசிரியரைப் பிடிக்கத் தனிப்படை தீவிரம்!

அரக்கோணம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் முருகன் என்பவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அரக்கோணம் அடுத்துள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் முருகன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் வேதனையடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் இது குறித்துச் சொல்லி கண்ணீர் வடித்திருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் ஆசிரியர் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர் முருகன் தலைமறைவாக இருந்து வருகிறார்.  அரக்கோணம் போலீஸார் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in