வரி ஏய்ப்பு புகார்: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

வரி ஏய்ப்பு புகார்: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in