`உன் லவ் உண்மையென்றால் இதை செய்'- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்'

`உன் லவ் உண்மையென்றால் இதை செய்'- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்'

காதலியிடம் தன்பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொள்ள நிர்பந்தித்த காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். உண்மைக் காதலை நிரூபிக்க பச்சைக்குத்த கொடுத்த அழுத்தமே இந்த நவீன ரோமியோவின் மிரட்டல்களை அம்பலப்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்துவருகிறார். இவருக்கு இணைய வழியில் மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்னும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. பூ வியாபாரியான அபினேஷ், அந்த மாணவி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவரிடம் காதலைச் சொல்லியிருக்கிறார். காதல் ஜோடியான இவர்கள் அப்போதே வீட்டுக்குத் தெரியாமல் குமரியின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் சேர்ந்தே சுற்றியுள்ளனர்.

ஒருகட்டத்தில் பூ வியாபாரியான அபினேஷ், கல்லூரி படிக்கும் மாணவி, படிப்பு முடிந்தபின் தன்னைபோல் டிகிரி படித்த மாப்பிள்ளையைக் கட்ட விரும்பக்கூடும். வீட்டில் நல்ல சம்பந்தம் பார்த்துவைத்தால் தன்னை விட்டுச் சென்றுவிடுவார் என வினோதமாக சிந்தித்தார். அப்போதுதான் அபினேஷ், தன் காதலியிடம் என்னைவிட்டு நீ பிரியாமல் இருக்க, உன் காதல் உண்மையென்றால் என் பெயரை உன் மார்பில் பச்சைக் குத்திக்கொள் என நிர்பந்தித்துள்ளார்.

இதற்கு அந்த மாணவி மறுக்கவே, நீயும், நானும் சேர்ந்து ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள், நீ என்னுடன் பேசிய குரல் பதிவுகள் ஆகியவற்றை உன் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த மாணவி காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு அபினேஷை பிரேக் அப் செய்தார். இதனால் மிகவும் கோபமடைந்த அபினேஷ், தன் முன்னாள் காதலியை, இனி உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என மிரட்டியதோடு, அவரின் பெற்றோருக்கும் போன் செய்து அவதூறாகப் பேசினார். மாணவியின் வீட்டிற்கும் குடிபோதையில் போய் தகராறு செய்தார்.

இதுகுறித்து கல்லூரி மாணவி மார்த்தாண்டம் போலீஸில் புகார் கொடுக்க, அபினேஷைக் கைது செய்து, செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in