ஐபோன் தயாரிப்பில் குதிக்கும் டாடா நிறுவனம்... மத்திய அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

டாடா - ஐபோன்
டாடா - ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்துக்கான ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கும் பணிகளை டாடா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதனை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

155 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த டாடா நிறுவனம் உப்பு முதல் கப்பல் கட்டுமானம் வரை சகல துறைகளிலும் ஜொலித்து வருகிறது. தற்போது மின்னணு துறையிலும் கால்பதிக்கும் டாடா நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோன்களை தயாரிக்க இருக்கிறது. தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோனுக்கான சப்ளையர்களில் ஒன்றாக விளங்கி வந்த நிலையில், கர்நாடகத்தின் கோலாரில் இயங்கி வந்த அதன் தொழிற்சாலையை டாடா வாங்க முயன்றது.

டாடா - ஐபோன்
டாடா - ஐபோன்

ஓராண்டுக்கும் மேலாக இழுபறியிலிருந்த ரூ4000 கோடி மதிப்பிலான உடன்பாடு, தற்போது சுமூக முடிவை எட்டியுள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய மற்றும் உலகச் சந்தைக்கான ஐபோன்களை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும். இதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் டாடாவின் ஐபோன் தயாரிப்புகளும் அடங்கும்.

அமெரிக்கா - சீனா இடையே வளரும் பிணக்கால், அமெரிக்க பெருநிறுவனங்கள் பலவும் தங்களுக்கான உற்பத்தி தளங்களை சீனாவிலிருந்து விலக்கி வருகின்றன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும், சீனாவுக்கு வெளியே துழாவத் தொடங்கியது. விஸ்ட்ரான் நிறுவனம் இந்தியாவிலிருந்து விலக முற்பட்ட வாய்ப்பை டாடா கைப்பற்றியதில், தற்போது இருப்பதைவிட மும்மடங்கு பெரிதாகவும், அதிகமாகவும் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையை டாடா பெருக்க உள்ளது.

சர்வதேசளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இதற்கான அறிவிப்பினை, இன்று மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அது தொடர்பான ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம், இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய மையமாக மாற்றியுள்ளது" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in