மக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இயங்கிவந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள குமரா பண்ணையூர், செல்வன்புதியனூர் சாலையைச் சீரமைக்கவும், ஆத்தூர் புன்னைக்காயல் சாலையில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரியும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் உச்சமாக ஆத்தூர் மெயின் பஜாரில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி இடையேயான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடத்திய மக்களோடு ஏடிஎஸ்பி கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஆத்தூர் - புன்னைக்காயல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை வரும் 15-ம் தேதி நிரந்தரமாக மூடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர். இருந்தும், 15-ம் தேதிவரை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாதவகையில் இந்த டாஸ்மாக் கடை போலீஸ் பாதுகாப்புடன் இயங்கும் எனவும் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in