ஏப்ரல் 15க்குள் டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்ஏப்ரல் 15க்குள் டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதி தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு  (சிஇஇடிஏ) நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘’ எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தகுதி தேர்வை 34, 288 மாணவர்களும், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை  (சிஇஇடிஏ) 4,961 பேர் எழுத உள்ளனர்.

15 நகரங்களில் 40 தேர்வுமையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் எம் இ,எம் பிளான்,எம் டெக், எம் ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கு சிஇஇடிஏ தேர்வு முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டான்செட் தேர்வுகளில் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஒரு விண்ணப்பமும், கலந்தாய்வுக்கு மற்றொரு விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. சிஇஇடிஏ தேர்வின் மூலம் ஒரே விண்ணப்பத்தின் கீழ் நுழைவுத் தேர்வும், மாணவர் கலந்தாய்வும் நடைபெறும்.

வெளிப்படை தன்மையோடு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பின் வினாத்தாளை எடுத்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கு முன் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் விடை குறிப்பும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட உள்ளோம். விடை குறிப்பில் தவறுகள் இருப்பின் மாணவர்கள் சேலஞ் செய்யலாம்.

நுழைவு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும். டான்செட் தேர்வு எழுதியவர்களுக்கான கலந்தாய்வு கோயமுத்தூரில் நடைபெறும், அதற்கு மாணவர்கள்  விண்ணப்பம் செய்ய வேண்டும்’’ என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in