முதன்முறையாக சிறப்பு விமானத்தில் தமிழர்கள்

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சென்னை வந்தனர்
முதன்முறையாக சிறப்பு விமானத்தில் தமிழர்கள்
ANI

டெல்லி மற்றும் மும்பைக்கு வரும் மீட்பு விமானங்களில் தமிழர்கள் வரவு சற்று அதிகரித்தது. இவர்களை டெல்லி விமானநிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு அனுப்புவதில் தாமதமானது. ஒவ்வொரு விமானத்திலும் காலியாக உள்ள இருக்கைகளை பொறுத்தே அவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட சிரமங்களை சரிசெய்ய டெல்லியிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.

ரஷ்யா தொடுத்த போரினால், உக்ரைனில் பயிலும் பல வெளிநாட்டு மாணவர்கள் சிக்கினர். இதில், சுமார் இருபதாயிரம் இந்தியர்களில் தமிழகத்தின் மாணவர் ஐந்தாயிரம் பேர் சிக்கியுள்ளனர். போர் துவங்கிய நாளான கடந்த பிப்ரவரி 24 முதல் மீட்புப்பணி ஆரம்பமானது. உக்ரைனின் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் லெவேஸ்கியா நாடுகளின் விமானநிலையங்களிலிருந்து இந்தியா திரும்புகின்றனர்.

தனியார் நிறுவனமான விஸ்தாராவின் விமானத்தில் தமிழர்களுக்கான சிறப்பு பயணமாக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முதல் சிறப்பு விமானம் நேற்று மாலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து சென்னைக்கு நேரடியாகக் கிளம்பிய. 180 பயணிகள் இருக்கைகள் கொண்ட இந்த சிறப்பு விமானத்தில் அதே எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான உணவு, குடிநீர் அனைத்தும் தனிவிமானத்தில் தேவையான அளவில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதில் பயணிக்க, மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக அமர்ந்தனர். இதுவரையிலும் உக்ரைனிலிருந்து வந்த மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை 717ஆகும். இதுபோல், உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களை அவர்களது வீடுகளில் சேர்க்க முதல் மாநில அரசாக தனிவிமானத்தை தமிழகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களை அனைவரும் சென்னை விமானம் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in