தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மிதமானது முதல் மிக கனமழை வரை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல ஆகஸ்ட் 3-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு சில மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 11 செ.மீ, சிவகங்கை திருப்புவனத்தில் 10 செ.மீ, குப்பணம்பட்டி, விளாத்திகுளம், பெரியகுளத்தில் தலா 8 செ.மீ மழையும் பொழிந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in