அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது தமிழக விமானி!

தமிழக விமானி மேஜர் ஜெயந்த்
தமிழக விமானி மேஜர் ஜெயந்த்அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது தமிழக விமானி!

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது தமிழகத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என தெரியவந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த, நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். சடலங்களின் சிதிலங்கள் மண்டாலாவின் கிழக்கு பங்களாஜாப் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உயிரிழந்த விமானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம், ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் என தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in