வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை

மழை
மழைhindu கோப்பு படம்

தமிழகத்தில் வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் அக்டோபர் 29ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும். இன்று தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றுமுதல் 28ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

29ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

30ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in