ஆளுநர் ரவியுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு!

ஆளுநர் ரவியுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு!

தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக காவல்துறையின் தலைவராக இருந்த டிஜிபி சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெற்றார். இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சங்கர் ஜிவால் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in