டெல்லியில் குடியரசுத் தின விழாவில் அணிவகுத்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி!

டெல்லியில் குடியரசுத் தின விழாவில் அணிவகுத்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி!

டெல்லியில் நடைபெற்ற குடியரசுத் தின விழா அணி வகுப்பில் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தமிழக வாகனம் கம்பீரமாக வலம் வந்தது.

74-வது குடியரசுத் தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதன் பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் வாகனங்களின் அணி வகுப்பு நடந்தது.

டெல்லி செங்கோட்டையில் நடந்த குடியரசுத் தின விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, பிரதமர் மோடி, எகிப்து அதிபர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்தின் வாகனங்களின் அணிவகுப்பு நடத்தது. தமிழ்நாடு வாகனமும் இந்த அணி வகுப்பில் பங்கேற்றது. சங்ககாலம் முதல் தற்போது வரை பெண்களின் பங்களிப்பு குறித்து அலங்கார உறுதி வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவ்வையார், வேலுநாச்சியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, மூவலூர் ராமாமிர்தம் உருவங்கள் இடம் பெற்றன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உருவங்கள். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இடம் பெற்றிருந்தது. தமிழக அலங்கார ஊர்தி சென்றபோது கரகாட்டக் கலைஞர்கள் நடனமாடி செல்ல நாதஸ்வரம் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in