
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களுக்குச் நேரடியாகச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்வதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...