ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது சட்டப்பேரவை: சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

வரும் ஜனவரி 9ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டப்பேரவை 9ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 9ம் தேதி நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் பேரவை கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தொடரை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பாவு கூறினார்.

இந்த கூட்டத்தொடரில் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in