தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி

தேசிய  கைப்பந்து போட்டியில்  தமிழக அணி வெற்றி

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில், ஆங்கில பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜூட்ஸ்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம், மராட்டியம், உத்தரப்பிரதேசம், பிஹார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன.

இதில் ஆண்களுக்கான கைப்பந்து இறுதி போட்டி நடைபெற்றது. போட்டியைப் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தார். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23, 25-23 என்ற புள்ளி கணக்கில் உத்தரப்பிரதேச அணியைவீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19, 25-22 என்ற புள்ளி கணக்கில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு இறுதி போட்டியில் தமிழக அணியும், பிஹார் அணியும் மோதின. இதில் 3 நேர் செட்டுகள் கொண்ட போட்டியில் தமிழக அணி 25-18, 25-20 என்ற நேர் செட்கள் கணக்கில் பிஹார் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் வென்ற தமிழகம், பஞ்சாப் அணிகளுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in