அமெரிக்கா மியூசியத்தில் தமிழ்நாடு சிலைகள்: 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போனது கண்டுபிடிப்பு!

அமெரிக்கா மியூசியத்தில் தமிழ்நாடு சிலைகள்: 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போனது கண்டுபிடிப்பு!

திருவாரூர் மாவட்டம். விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன 9 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய போது, கோயிலில் இருந்த விஷ்னு, தேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற விஷ்ணு, நடனம் கிருஷ்ணா ஆகிய 9 சிலைகளும் திருடப்பட்டு போலியான சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மூலமாக திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பெற்று, அதை ஒப்பிட்டு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருடப்பட்டுள்ள விஷ்னு, தேவி, பூதேவி ஆகிய சிலைகள் இருப்பதையும் அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகளை இருப்பதையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்கா வாஷிங்டன் டிசியில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட்டின் இணையதளத்திலும், அமெரிக்கா கிறிஸ்டியின் இணையதளத்திலும் நடனமாடும் கிருஷ்ணா மற்றும் நிற்கும் விஷ்ணு ஆகிய இரண்டு பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர உரிய ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தமிழக அரசிடம் சமர்பித்துள்ளனர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கெனவே அமெரிக்கா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7 சிலைகள், தற்போது அமெரிக்காவின் அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலைகள் என மொத்தம் 9 சிலைகளை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in