பொங்கல் கோலத்தில் ‘தமிழ்நாடு’ முழக்கம்: திமுக தொண்டர்களின் புது முயற்சி!

பொங்கல் கோலத்தில் ‘தமிழ்நாடு’ முழக்கம்: திமுக தொண்டர்களின் புது முயற்சி!

பொங்கல் கோலத்தில் திமுக தொண்டர்கள் பலரும் இம்முறை தமிழ்நாடு என்னும் வாசகத்தையும் எழுதியிருப்பது கவனம் குவித்து வருகின்றது.

தமிழகத்தில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் என்பதா? தமிழ்நாடு என்பதா என்பது குறித்து ஆளுநரோடு மல்லுக்கட்டும் நடந்து வருகின்றது. அதனுடைய நீட்சியாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான பொங்கல் பண்டிகை அறிவிப்பிலும்கூட தமிழ்நாடு என்னும் வார்த்தை இடம்பெற்று இருக்கும், தமிழக அரசின் முத்திரை தவிர்க்கப்பட்டு, இந்திய அரசு சின்னம் போட்ட அழைப்பிதழே வெளியானது. இந்நிலையில் தான் திமுகவினர் தமிழ்நாடு என்னும் முழக்கத்தை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

வழக்கமாக பொங்கல் நேரத்தில் வீட்டு வாசலில் பொங்கல் பானையை கோலமாக வரைந்து, அதில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் என எழுதுவது வழக்கம். ஆனால் இம்முறை தீவிர திமுக தொண்டர்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் அருகிலேயே இனிய பொங்கல் வாழ்த்துகள் என்பதற்குப் பதிலாக, ‘தமிழ்நாடு’ எனப் பெரிதாக எழுதியுள்ளனர். இது இணையத்திலும் வைரல் ஆகிவருகின்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in