தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு... பெற்றோர்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?

தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு... பெற்றோர்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?

பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னம் சேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். மேஜை, பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதோடு, சில பொருட்களை எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வு தனியார் பள்ளி நிர்வாகிகளை பதறவைத்தது.

இந்நிலையில், பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், `ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட்டு, அதில் குறைபாடு கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும்.

பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும். தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in