என்ஐஏ-க்கு தமிழக காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

என்ஐஏ-க்கு தமிழக காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

"கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு தமிழக காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்" என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடந்த இடத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளோம். மேலும் இது தொடர்பாக 5 பேரை இரண்டாவது நாளாக காவல் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

குறுகிய காலத்தில் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை திரட்டிய கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்ததோடு வெகுமதி வழங்கினோம். இந்த வழக்கை முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இன்றைக்கு உள்துறை செயலகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் கோவை மாநகர ஆணையர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த வழக்கை அவர்கள் கையில் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக காவல்துறை செய்யும். என்ஐஏ விசாரணைக்கு தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in