தமிழகத்தில் மார்ச் 13-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட் எப்போது வெளியீடு?

தமிழகத்தில் மார்ச் 13-ல் பிளஸ் 2  பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட் எப்போது வெளியீடு?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை( ஜன.4) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை நடப்பாண்டில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக அடுத்த மாதம் செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in