கீரனூரில் ஆறு செ.மீ மழை!

இன்னும் ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
கீரனூரில் ஆறு செ.மீ மழை!
கோப்புப் படம்

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆறு செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக, சிறிது இடைவெளி விட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆறு சென்டிமீட்டர் மழையும்,  தேனி மாவட்டம் வீரபாண்டியில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் லேசான மழை பரவலாக பெய்திருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in