மக்களின் கடும் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டர்: தமிழக அரசு கோரியது

மக்களின் கடும் எதிர்ப்பை மீறி  பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டர்: தமிழக அரசு கோரியது

பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70-ம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் எனவும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in