`மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்'- மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

`மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்'- மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடல் பகுதியில் அதிக காற்று வீச கூடும்,  கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த  நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் தமிழக  மீன்வளத்துறை ஆணையர் சார்பில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும்  தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மின்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in