`ஆண்கள் கூச்சலிடுதல் கூடாது; சைகை காட்ட கூடாது'- பெண் பயணிகளை பாதுகாக்க தமிழக அரசு அதிரடி

`ஆண்கள் கூச்சலிடுதல் கூடாது; சைகை காட்ட கூடாது'- பெண் பயணிகளை பாதுகாக்க தமிழக அரசு அதிரடி

பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், பேருந்து சேவை குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்கள் தாங்கள் பயணிக்கும் பேருந்துகளை எளிதாக கண்டுபிடிக்கும் வசதியாக தமிழக போக்குவரத்து கழகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் பெண்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு பிங்க் கலர் அடிக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் தங்கள் பேருந்தை எளிதாக கண்டுபிடித்து சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

இதே நேரத்தில் பேருந்துகளில், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய விதிகளை சேர்த்து திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது. பெண்களை பார்த்து கூச்சலிடுதல் கூடாது. பாலியல் ரீதியாக சைகை காட்ட கூடாது. பெண்களை புகைப்படம் எடுக்க கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை, நடத்துநர் எச்சரித்த பின், பேருந்துகளில் இருந்து இறக்கிவிடலாம். மேலும் நடத்துநர் எச்சரித்த பின்னரும், விதிகளை மீறும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in