உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு! கர்நாடக அரசுக்கு உத்தரவிட சொல்லி கோரிக்கை!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

காவிரி
காவிரி

காவிரி குறித்த வழக்குகளை முன்பு விசாரித்த  உச்சநீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு எவ்வளவு நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பதை  வரையறுத்து தெளிவுபடுத்தியிருந்தது.  அதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரையில் தமிழகத்துக்கு 53.77 டிஎம்சி. தண்ணீா் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கா்நாடக அரசு வெறும் 15.79 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள  நீரை வழங்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தபோதும் அதனை கர்நாடக அரசு மதிக்கவில்லை. தினந்தோறும் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதையும்  கர்நாடக அரசுத் தரப்பு அதிகாரிகள்  ஏற்கவில்லை.  ஆகஸ்ட் 22 ம் தேதி வரையில் 8,000 கனஅடி நீர்  மட்டுமே திறக்கப்படும் என்று என்று தெரிவித்தனர். 

இதையடுத்து, அந்த கூட்டத்திலிருந்து தமிழக நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். தமிழகத்துக்கான உரிய பங்கீட்டு  நீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் நேற்று  தெரிவித்திருந்தார்.  அதன்படி, இன்று உச்சநீதிமன்றத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு  தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின்  எழுதிய கடிதங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in