ஓடும் பேருந்தில் கழன்று விழுந்த இருக்கை; தூக்கி வீசப்பட்ட பயணி: குமரியில் நடந்த பயங்கரம்!

ஓடும் பேருந்தில் கழன்று விழுந்த இருக்கை; தூக்கி வீசப்பட்ட பயணி: குமரியில் நடந்த பயங்கரம்!

மார்த்தாண்டம் அருகே அரசு பேருந்தில் இருக்கை கழன்று விழுந்து பயணி ஒருவர் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்து கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து பயணி ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் மழை காலங்களில் பேருந்துக்குள் மழை நீர் வடியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பேருந்துக்குள்ளேயே பயணிகள் குடை பிடித்து செல்லும் அவல நிலையும் காணப்படுகிறது. தற்போது, அரசுப் பேருந்தில் இருக்கை கழன்று பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்துள்ளது.

மார்த்தாண்டில் இருந்து கேரளா மாநிலம் பளுகல் பகுதிக்கு 84ஏ என்ற தமிழக அரசு பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் இருந்த இருக்கை ஒன்று கழன்று விழுந்தது. அதில், தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் என்பது கீழே விழுந்து தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்தார். அவரை பயணிகள் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மழை காலங்களில் இந்த அவல நிலையை பயணிகள் சந்திக்கும் நிலை காணப்படுகிறது. தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in