மாதம் 4 முறை, 30 நிமிடங்கள்: குடும்பத்தினருடன் சிறைக்கைதிகள் தொலைபேசியில் பேசும் திட்டம் அறிமுகம்!

மாதம் 4 முறை, 30 நிமிடங்கள்: குடும்பத்தினருடன் சிறைக்கைதிகள் தொலைபேசியில் பேசும் திட்டம் அறிமுகம்!

சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு மாதத்தில் 4 முறை தொலைபேசியில் 30 நிமிடங்கள் பேச அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பேச முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. அதுவும் ஆயுள் தண்டனை கைதிகள் அவரது உறவினர்களிடம் பேசுவது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. இதனிடையே, சிறையில் இருக்கும் கைதிகளை உறவினர்களுடன் தொலைபேசியில் பேசும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக மதுரை மத்திய சிறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கைதி ஒருவர் மாதம் 4 தடவை தங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் 30 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாட்டை தமிழக சிறைத்துறை நிர்வாகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக மதுரை மத்திய சிறையில் 15 தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கைதிகள் யாருடன் பேச விரும்புகிறார்களோ அவர்களின் பெயர், தொலைபேசி எண்களை சரி பார்த்த பின்பு பேச அனுமதிக்கப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரம் காரணமாக அவர்களின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்யும் திட்டம் இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in