‘எல்லை மீறி ஏன் வந்தீர்கள்?’ - படகைக் கவிழ்க்க முயன்ற இலங்கைக் கடற்படையினர்!

‘எல்லை மீறி ஏன் வந்தீர்கள்?’ - படகைக் கவிழ்க்க முயன்ற இலங்கைக் கடற்படையினர்!

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் அதிகமான விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்தனர். தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரது விசைப்படகில் இருந்த மீனவர்களை மிரட்டிய இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகின் மீது தங்கள் படகை மோதி கவிழ்க்க முயன்றனர். நல்வாய்ப்பாக சக்தியின் விசைப்படகு கவிழவில்லை.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக மீனவர்கள் அச்சத்தோடு கரைக்குத் திரும்பினர். கரை திரும்பிய பின்னர் இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in