பரபரப்பு... யாருமே எதிர்பார்க்கலை... திடீரென தண்டவாளத்தில் தலை வைத்த விவசாயிகள்!

பரபரப்பு... யாருமே எதிர்பார்க்கலை... திடீரென தண்டவாளத்தில் தலை வைத்த விவசாயிகள்!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசையும் கண்டித்து காவிரி டெல்டாவில் விவசாயிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு பருவமழை கிட்டத்தட்ட  முடியும் தருவாயில் இருக்கிறது. கர்நாடக அணைகளில் அந்த மாநிலத்தின் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபிறகும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே ஆணையத்தின் முடிவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கர்நாடகா அரசு உபரி நீரையும் தடுத்து மேகதாதுவில் அணைகட்டுவதற்கு முயற்சிக்கிறது. மத்திய அரசு அதற்கு மறைமுகமாக துணை போகிறது.

3.50 லட்சம் ஏக்கரில் தமிழ்நாட்டில் குருவை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் பயிர்கள் கருகத் தொடங்கி உள்ளன. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழ்நாட்டின் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி  காவிரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19ம் தேதி  ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என பி ஆர் பாண்டியன் தலைமையிலான  விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயிலை பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தண்டவாளத்தில்  படுத்தும், அமர்ந்தும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அதன் பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுபோல ரயில் மறியல் நடைபெற்ற மற்ற இடங்களிலும் விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in