தமிழக விவசாயிகள் சங்க பயணக்குழுவினருக்கு ராஜஸ்தான் முதல்வர் வாழ்த்து

விவசாயிகள் குழுவினருடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
விவசாயிகள் குழுவினருடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்தமிழக விவசாயிகள் சங்க பயணக்குழுவினருக்கு ராஜஸ்தான் முதல்வர் வாழ்த்து

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விவசாயிகளின் கோரிக்கைகள்  வெற்றி பெற  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பி.ஆர். பாண்டியன் தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்,  டெல்லி  விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மார்ச் 2-ல் கன்னியாகுமரியில்  இருந்து நீதி கேட்கும் நெடும் பயணம் துவக்கியுள்ளனர். அவர்கள் செல்லும் வழிகளில் உள்ள பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்து வருகின்றனர்.

அதன்படி  ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட்டை  ஜெய்ப்பூர் தலைமை அலுவலகத்தில் இன்று  சந்தித்தனர். அவர்களை  வாயிலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்ற முதல்வர் அவர்களின் அருகில்  அமர்ந்து நீண்ட நேரம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். 

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர்,  மாநில அரசுகள்தான் வழக்கு குறித்து பதில் அளிக்க முடியும்,  எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தட்டிக் கழித்துள்ளதை முதல்வரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர். அதையடுத்து  இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்த  ராஜஸ்தான் முதல்வர் விவசாயிகளின்  பயணம் வெற்றி பெற முழு ஆதரவளித்து வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in