26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 10 முதல் 15 தினங்களே  உள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக மழை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட  பெரும்பாலான மாவட்டங்களில்  இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இந்த மழை 10-ம் தேதி வரையிலும் தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று  காலை முதல் சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையத்தை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழ்நாடு, புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். எனவே, வெளியே செல்பவர்கள் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், மழை நீர் தேங்கியுள்ள பள்ளம் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in