சிலிண்டர் முன்பதிவில் மீண்டும் தமிழ்... இண்டேன் நிறுவனம் அறிவிப்பு!

சிலிண்டர்
சிலிண்டர்

இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு சேவையில் திடீரென தமிழ் மொழி நிறுத்தம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மீண்டும் தமிழ் இணைக்கப்பட்டு விட்டதாக இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து எஸ்.எம்.எஸ்  வாயிலாகவும் அல்லது மொபைல் எண்ணிற்கு கால் செய்தும் நொடிப் பொழுதில் சிலிண்டரை முன்பதிவு செய்து பெற்று விடலாம். இவ்வாறு சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட அலுவல் மொழிகள் இடம்பெறும். 

இந்நிலையில் இண்டேன் நிறுவனத்தின் தானியங்கி சமையல் எரிவாயு முன் பதிவின் போது தமிழ் மொழி திடீரென நிறுத்தப்பட்டு இந்தி மொழி மட்டுமே இடம் பெற்றது. இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? என்று  கேள்வி எழுப்பிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சிலிண்டர் முன்பதிவு சேவையில் தமிழ்மொழியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு விட்டதாக இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல்லில்  இருந்து ஜியோவுக்கு மாறும்போது சிக்கல் ஏற்பட்டதாகவும், அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இண்டேன்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in