
பஞ்சாப் மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லை அருகே இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடியை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று(அக்.20) ஏற்றி வைத்தார்.
இந்தியாவின் உயரமான தேசியக்கொடி என்பது கர்நாடக மாநிலம் பெலகாவியில் 361 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதைய பஞ்சாப் தேசியக்கொடி 418 அடி உயரத்தில் அமைக்கப்பட்டதில், நாட்டின் மிக உயரமான தேசியக்கொடியாக இது பெருமை பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் அட்டாரி - வாகா எல்லை அருகே இந்த தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அட்டாரி கிராமத்திலுள்ள இந்த அமைவிடத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகா வருகிறது. இந்த வகையிலும் நாட்டின் உயரமான தேசியக்கொடி பெருமை சேர்க்கிறது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாட்டின் மிக உயரமானதேசியக்கொடியை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஏற்றி வைத்தார். பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசிய அமைச்சர் நிதின்கட்காரி, “சாலைகள், மேம்பாலங்கள் என நாட்டின் உள்கட்டமைப்புக்கான பணிகள் எத்தனையோ செய்திருப்பினும், அவை எல்லாவற்றையும் விட நாட்டின் உயரமான தேசியக்கொடியை ஏற்றி வைப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!