தவணை முறையில் கரையும் தாஜ்மகால்: களவு போகும் பளிங்கு கற்கள்

தவணை முறையில் கரையும் தாஜ்மகால்: களவு போகும் பளிங்கு கற்கள்

காதலின் சின்னமான தாஜ்மகால் தவணை முறையில் சுரண்டலுக்கு ஆளாகி வருவது, தகவலறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மனைவி மும்தாய் மீதான பேரன்பின் வெளிப்பாடாக மாமன்னர் ஷாஜஹான் கட்டிய நினைவுச் சின்னம் இது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், முறையான பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களிலான ஏற்கனவே பொலிவிழந்து வருகிறது. இது போதாதென்று ஆண்டுதோறும் தாஜ்மகாலின் விலைமதிப்பில்லா பளிங்குக் கற்கள் திட்டமிட்டு திருடப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் எழுப்பிய வினாக்களுக்கு தொல்லியல் துறை அளித்த பதிலில் இந்த விவகாரம் வெளியுலகை எட்டியுள்ளது. தாஜ்மகாலின் தனிச்சிறப்பே அதன் பளிங்கு கற்கள்தான். நடப்பு உலகில் தேடினாலும் கிடைக்காத அபூர்வ பளிங்கு கற்களைக் கொண்டு தாஜ்மகால் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் அந்த கற்கள் திருட்டுக்கு ஆளாவதும், அவற்றை நிவர்த்தி செய்ய பலகோடி செலவில் புதிய கற்களால் தாஜ்மகாலின் மெருகு காப்பாற்றப்பட்டு வருவதாகவும் தொல்லியல் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் புதிய பளிங்கு கற்களால், தாஜ்மகாலுக்கே உரிய தனித்தன்மையை காப்பாற்ற முடியவில்லை. தாஜ்மகாலுக்கு சொந்தமான பளிங்கு கற்கள் சூரிய ஒளியை விதம்விதமாய் பிரதிபலிக்கக் கூடியவை. அந்த அபூர்வ கற்களின் தன்மை புதிய கற்களுக்கு இல்லாததால், தாஜ்மகால் தனது பூர்வாசிரம பொலிவை இழந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in