பாகிஸ்தான் அணிக்கு சோதனை காலம்: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு சோதனை காலம்: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி.

ஆஸ்திரேலியாவில் நடந்த வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் வில்லியம்சன் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். வெஸ்லி மாதேவேரே 17 ரன்னும், கிரேக் எர்வின் 19 ரன்னும், பிராட் எவன்ஸ் 19 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே திணறியது. முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும், பாபர் அசாம் 4 ரன்னிடம் ஆட்டம் இழந்தனர். இதை தொடர்ந்து மசூத் களமிறங்கினார். இவர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். முகமது நவாஸ் 22 ரன்னில் வெளியேறினார். 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கு வெற்றிக்கு உதவினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in