அதிரடி காட்டிய மேக்ஸ்: ஜிம்பாப்வே அணியை ஓட விட்ட நெதர்லாந்து அணி!

அதிரடி காட்டிய மேக்ஸ்: ஜிம்பாப்வே அணியை ஓட விட்ட நெதர்லாந்து அணி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது. மேக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார்.

20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே- நெதர்லாந்து அணிகள் அடிலெய்டில் இன்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் 24 பந்தில் 44 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரி 3 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் வில்லியம்சன் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் இரட்டை இலக்கை தாண்டவில்லை. நெதர்லாந்து தரப்பில் பால் 3 விக்கெட்டுகளையும், பரன்டோன் கிளவர், லோகன், லீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்- டோன் ஜோடி அதிரடியாக விளையாடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 52 ரன்னிலல் மேக்ஸும், 32 ரன்னில் டாம் கூப்பரும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 17 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in