டி20 உலக கோப்பை: அயர்லாந்துக்கு அதிர்ஷ்டம்; இங்கிலாந்துக்கு மழையால் வந்த சோதனை!

டி20 உலக கோப்பை: அயர்லாந்துக்கு அதிர்ஷ்டம்; இங்கிலாந்துக்கு மழையால் வந்த சோதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அயர்லாந்து அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து- இங்கிலாந்து அணிகள் இன்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்டி பால்பிரைன் 62 ரன்கள் குவித்தார். இவர் 5 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசினார். லோர்கன் டக்கர் 34 ரன்கள் எடுத்தார். இதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேலீஸ் 7 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் வந்த டேவிட் மாலன் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள், அயர்லாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வலுவான இங்கிலாந்து அணி மழையால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in