தெறிக்கவிட்ட பாபர்- ரிஸ்வான்; அரையிறுதியில் வீழ்ந்தது நியூசிலாந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!

தெறிக்கவிட்ட பாபர்- ரிஸ்வான்; அரையிறுதியில் வீழ்ந்தது நியூசிலாந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!

டி20 உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. பாபர்- ரிஸ்வான் ஆகியோர நியூசிலாந்து வீச்சை தெறிக்கவிட்டனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஆலன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே 21 ரன்னும், வில்லியம்சன் 46 ரன்னும், பிலிப்ஸ் 6 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த அணி 49 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. மிட்செல்- ஜேம்ஸ் ஜோடி அணியை காப்பாற்றினர். மிட்செல் அதிரடியாக விளையாடிய 35 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அவருக்கு பக்கபலமாக ஜேம்ஸ் இருந்தார். இவர் 12 ரன்னில் 16 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும் பாகிஸ்தான் தரப்பில் அப்ரடி 2 விக்கெட்டுகளையும் முகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானம்- பாபர் அசாம் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் 38 பந்துகளில் 50 ரன் விளாசினார். இது இவரது 30-வது அரை சதமாகும். டி20 போட்டியில் அரை சதங்கள் அடித்ததில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் பாபர். 42 பந்தில் 53 ரன்கள் எடுத்திருந்த பாபர், போல்ட் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் முகமது ஹாரிஸ் களமிறங்கினார். இவர் ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த அசத்தினார். 43 பந்தில் 57 ரன் குவித்த ரிஸ்வான் 5 பவுண்டரிகளை விளாசினார். 26 ரன்னில் 30 ரன் குவித்த ஹரிஸ், சன்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 19.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது அரையிறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in