டி20 உலக கோப்பையில் கோலி மீண்டும் விஸ்வரூபம்: நெதர்லாந்தை பந்தாடியது இந்தியா!

டி20 உலக கோப்பையில் கோலி மீண்டும் விஸ்வரூபம்: நெதர்லாந்தை பந்தாடியது இந்தியா!

கோலியின் அதிரடி ஆட்டத்தால் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. கோலி, கேப்டன் ரோகித், சூர்யகுமார் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

டி20 உலக கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் இன்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் கோலி களம் இறங்கினார். இவர் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நெதர்லாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அரை சதத்தை விளாசியது. கேப்டன் ரோகித் சர்மா 39 பந்தில் 53 ரன்கள் குவித்தபோது ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசினார்.

இதன் பின்னர் விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. 25 பந்தில் 51 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கோலி 44 பந்தில் 62 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி வீரர்கள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டிம் பிரிங்கில் 20 ரன்கள் அடித்தார். நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் இந்திய அணி ரன்கள் 56 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், ஆக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in