சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார்.

நீதிபதி டி.ராஜா வரலாறு

மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தில் கடந்த 1961-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃபு வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் எம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த நீதிபதி டி.ராஜா, சட்டப்படிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரி முடித்து கடந்த 1988-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியராக பணியை தொடங்கிய ராஜா, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகள் நிபுணத்துவம் பெற்றுவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைக்கழக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி டி.ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். அதன்படி இன்று, நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆதிகேசவலு இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க தொடங்கியிருக்கிறார். நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைகிறது. 75 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றத்தில் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in