புதுச்சேரியை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு!

புதுச்சேரியை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு!

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோய் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நேற்றுவரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், இன்று பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நாமக்கல்லை சேர்ந்த பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று உயிரிழந்திருந்தார்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து காய்ச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்திருந்தார். இதில் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியிருந்தார். இதில் இருவர் குழந்தைகள் ஆவார்கள். இந்நிலையில் புதுவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடு, கிடுவென உயர்ந்து வருகின்றது. நேற்று பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இன்று மேலும் 6 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடுகளிலும், சிலர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை மிரட்டும் காய்ச்சல்!

புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என மொத்தம் 470 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிநோயாளிகளாக நேற்று சிகிச்சைக்கு வந்தனர். இதில் 46 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக இந்த மூன்று மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். புதுவையில் காய்ச்சல் காரணமாக 188 குழந்தைகள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in