தமிழ்நாட்டில் ஸ்விக்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்: உணவு டெலிவரி சேவை பாதிக்கும்!

ஸ்விக்கி
ஸ்விக்கிதமிழ்நாட்டில் ஸ்விக்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்: உணவு டெலிவரி சேவை பாதிக்கும்!

தமிழ்நாடு முழுவதும் உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஸ்விக்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழ் நாடு முழுவதும் உணவு டெலிவரி சேவை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் முக்கிய நிறுவனமாக ஸ்விக்கி (Swiggy) திகழ்கிறது.கொரோனா மற்றும் கொரோனா காலத்திற்குப் பிறகு துரித உணவு சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள ஸ்விக்கியில் பணியாற்றும் ஊழியர்கள், தமிழகத்தில் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

குறிப்பாக சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் பகுதிகளில் இருக்கக்கூடிய ஸ்விக்கி ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வரை இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். புதிய ஸ்லாட்டு முறை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே வழங்கி வந்த டர்ன் ஓவர் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஆர்டர் எடுக்கும் போது ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழக முழுவதும் ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலை பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in