சிலிக்கன் வேலி வங்கி
சிலிக்கன் வேலி வங்கி

அமெரிக்க வங்கி திவால்: சர்வதேச பொருளாதார சரிவின் தொடக்கமா?

இந்தியாவுக்கு பாதிப்பு உண்டா?

சிலிக்கன் வேலி என்னும் அமெரிக்க வங்கி திவாலாகி இருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த பொருளாதார சரிவு மீண்டும் திரும்புவதாக பீதியும் கிளம்பியுள்ளது.

அமெரிக்க வங்கிகளின் தரவரிசைப் பட்டியலில் 16வது இடத்திலிருந்த சிலிக்கன் வங்கியின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக ஓர் அமெரிக்க வங்கி திவால் நிலைக்கு ஆளாகி இருப்பது, அமெரிக்காவுக்கு அப்பாலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.

2008ஆம் ஆண்டு பங்குச் சந்தை சரிவு, வங்கிகள் திவால் என பெரும் பொருளாதார சரிவின் தொடக்கம் இப்படியான அறிகுறிகளோடு ஆரம்பித்தது. ஏற்கனவே கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார சிக்கல்களில் இருந்து சர்வதேச நாடுகள் விடுபடாத சூழலில், சிலிக்கன் வேலி வங்கி திவாலாகி இருப்பது இதர வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மத்தியில் அச்சம் விதைத்துள்ளது.

இந்த சிலிக்கன் வேலி வங்கி இந்தியாவிலும் கிளைபரப்பி, பல்வேறு நிறுவனங்ளிலும் முதலீடுகளை செய்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு நேருமா என்ற கேள்வியை, நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் முன்னாள் தலைவரான ரஜ்னீஷ் குமார் நிராகரித்துள்ளார். ஒப்பீட்டளவில் சிறிய வங்கியான சிலிக்கன் வேலி திவாலின் பாதிப்பு குறித்து, அமெரிக்காவே அச்சப்படாதபோது இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in