காதல் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற வங்கி ஊழியர்: நடத்தையில் சந்தேகத்தால் நடந்த விபரீதம்

ஆசிஃப் இக்பால், பிரியங்கா பத்ரா
ஆசிஃப் இக்பால், பிரியங்கா பத்ரா

நடத்தையில் சந்தேகப்பட்டு, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மண்ணடி பி.வி அய்யர் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசிஃப் இக்பால் (45). இவரது மனைவி பிரியங்கா பத்ரா (39). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகவும், மனைவி பிரியங்கா ஐ.டி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் மனைவி பிரியங்காவின் நடத்தையில் ஆசிஃப் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்ததால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் இருவருக்கிடையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆசிஃப் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் பிரியங்காவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் இன்று காலை ஆசிஃப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த குற்றத்திற்காக ஆசிஃப் இக்பாலை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in