
2-வது திருமணம் செய்து ஏமாற்றிய தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வந்தவர் ராஜ்குமார். இவர் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது மருத்துவமனையில் பணியாற்றும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் மாற்றலாகி சங்கரலிங்கம் காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் 2-வது மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஏற்கெனவே திருமணமானர் என அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
தனது முதல் திருமணத்தையும் மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், தன்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண், நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த டிஐஜி உத்தரவிட்டார். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக்கா டிஐஜி உத்தரவிட்டுள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.