மதுரையில் நடுரோட்டில் சகோதரர்களை சரமாரியாக வெட்டிய கும்பல்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மதுரையில் நடுரோட்டில் சகோதரர்களை சரமாரியாக வெட்டிய கும்பல்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பட்டப்பகலில் நடுரோட்டில் சகோதரர்களை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான் வேதனையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மதுரை வலையம்குளத்தைச் சேர்ந்தவர்கள் திருமால், அழகுராஜா. சகோதரர்களான இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வலையம்குளத்தை உள்ள தேனீர் கடையில் நேற்று மதியம் அண்ணன், தம்பி இருவரும் டீ குடித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருவர் மீதும் சரமாரியாக அரிவாளால் தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்கள் வந்த பைக்கை அடித்து நொறுக்கிய கும்பலில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடுரோட்டில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தது தான் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது, சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. மதுரையில் நடுரோட்டில் அண்ணன், தம்பி மீது மர்மகும்பல் அரிவாளால் வெட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in