எல்லை அருகே வந்த பாகிஸ்தானின் மர்ம ட்ரோன்: உஷாரான பாதுகாப்புப் படையினர்

எல்லை அருகே வந்த பாகிஸ்தானின் மர்ம ட்ரோன்: உஷாரான பாதுகாப்புப் படையினர்

இன்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பறந்த பாகிஸ்தானின் ட்ரோன் மீது எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த ட்ரோன் மூலமாக ஆயுதம் அல்லது வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டதா என்பதைக் கண்டறிய தீவிரத் தேடுதல் பணிகள் நடந்துவருவதாகப் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 04.15 மணி அளவில் ஜம்மு மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள அர்னியா பகுதியில் வெளிச்சத்துடன் மர்ம ட்ரோன் ஒன்று வந்தது. எச்சரிக்கையுடன் இருந்த பாதுகாப்புப் படைவீரர்கள் சுமார் 300 மீட்டர் உயரத்தில் பறந்த அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன், அது திரும்பச் சென்றது.

எல்லை வழியாக ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தப்படும் முயற்சிகள் ஜம்முவில் அடிக்கடி நடப்பதால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜம்மு, கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் சமீப காலங்களில் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஒட்டும் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த மே 29 அன்று கதுவா மாவட்டத்தில் ஏழு காந்த வெடிகுண்டுகளுடன் (Magnetic bomb) வந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in