சூர்யகுமார் யாதவுக்கு மேலும் ஒரு பெருமிதம்: ஐசிசியின் சிறந்த டி20 வீரராக தேர்வாகி அபாரம்!

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில் அவர் தனது அதிரடி ஆட்டம் மூலமாக 1164 ரன்களை குவித்திருந்தார்.

2022ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த டி20 வீரராக தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ், கடந்த ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது என்ற பெருமையைப் பெற்றார். இவர் 2022-ல் 31 போட்டிகளில் விளையாடி 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1164 ரன்கள் எடுத்து அபாரம் காட்டியுள்ளார்.

2022ம் ஆண்டில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 68 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டில் இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களை அடித்து, ஆண்டு முழுவதும் இந்திய அணிக்கு முக்கிய பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார். மேலும் , 2022- ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் இவர் ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்களைப் பதிவுசெய்தார், அப்போது அவரது ஸ்ட்ரைக்-ரேட் 189.68 ஆக இருந்தது. தற்போது டி20 போட்டிகளின் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் 908 புள்ளிகளுடன் சூர்யகுமார் முதலிடத்தில் உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in