சூர்யகுமார் யாதவ் சொதப்பல்: தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் - அதே பவுலர், அதே விக்கெட்!

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்சூர்யகுமார் யாதவ் சொதப்பல்: தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் - அதே பவுலர், அதே விக்கெட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.

மார்ச் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 16 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலி 4 ரன்களுடன் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவ் எல்பிடபுள்யூ முறையில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். இந்த விக்கெட்டுகள் 4வது ஓவரின் 5 மற்றும் 6வது பந்துகளில் விழுந்தது.

அதேபோல இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் முதல் ஓவரின் 3வது பந்திலேயே சுப்மன் கில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அதன்பிறகு 4வது வது ஓவரை ஸ்டார்க் வீசினார், இதில் 4வது பந்தில் ரோகித் சர்மா 13 ரன்களுடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு அடுத்த பந்திலேயே கடந்த ஆட்டத்தைப் போலவே, அதே ஸ்டார்க் பந்தில், அதே எல்பிடபுள்யூ முறையில் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து இருமுறை டக் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in